style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை காலை முதல் மாலை வரை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் பல்வேறு ஊர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்கவிருப்பதால் இன்றேவீடு திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் ஒரே நாளில் பெரும்பாலானோர் ஊர்களுக்கு செல்வதால் சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.