இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே முழு ஊரடங்கானது அமலில் உள்ளது. அதேபோல் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் இன்று (10.5.2021) முதல் 24.5.2021 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் நாளான இன்று சென்னையில் போலீஸார் பல முக்கிய இடங்களில்தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

Advertisment