Advertisment

சென்னை சேப்பாக்கத்தில் குவிந்துள்ள இஸ்லாமியர்கள்!

Advertisment

தடையை மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிட பேரணி நடந்து வருகிறது.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணியில் இஸ்லாமிய இயக்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

பேரணி நடந்து வரும் நிலையில் சட்டமன்ற பகுதியிலும், மற்ற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 35 கேமராக்கள், 100 சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Advertisment

அதேபோல் பேரணி சட்டமன்றத்தை நோக்கி வரும் நிலையில் ஆங்காங்கே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

caa rally Chennai Cheppak
இதையும் படியுங்கள்
Subscribe