சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து செப்டம்பர்- 1 ஆம் தேதி முதல் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மாநகர பேருந்துகள் மூலம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தினமும் 2,400- க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு 10 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததன் மூலம் ரூபாய் 10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சென்னை மாநகர அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.