சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்வோர் என அனைவரையும் இது பாதித்தது.

Advertisment

bus strike

ஜூன் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது, வரவு வைக்கப்படாதது குறித்து அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்ற காரணங்களால் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜூன்மாதத்திற்கான முழு ஊதியமும் இன்று மாலை 5 மணிக்குள் வரவு வைக்கப்படும் என போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேஷ் வாக்குறுதியளித்ததையடுத்து வாபஸ் வாங்கப்பட்டது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு திரும்பினர்.