இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்திலும் இன்று ( 24/03/2020) மாலை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அரசு அறிவித்த 144 தடை உத்தரவும் இன்று மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.

chennai bus passengers peoples travel coronavirus

இதனால் அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுப்பு மற்றும் வீட்டில் இருந்தே பணிபுரியஅனுமதி அளித்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதன் காரணமாகச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 1,855 அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் 1.48 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.