Skip to main content

சென்னை புத்தகத் திருவிழாவில் மூன்று புதிய நூல்கள்! -நக்கீரன் ஆசிரியர் வெளியிட்டார்!


 

​aarurtamilnaadan

 

சென்னை புத்தககத் திருவிழா நக்கீரன் அரங்கில், நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய காலநதி, காற்றின் புழுக்கம், சூரியனைப் பாடுகிறேன் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி 09.01.2019 புதன்கிழமை மாலை இனிதாய் அரங்கேறியது.

 

aarurtamilnaadan



கவிஞர் ஜலாலுதின் வரவேற்க, கவிஞர் ஜெயபாஸ்கரன் தலைமையில் முனைவர் நா.நளினிதேவி முன்னிலையில் இதழியல் போராளி நக்கீரன் கோபால் நூல்களை வெளியிட்டார். அதை இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கவிஞர் அமுதபாரதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 

aarurtamilnaadan


 
இந்த நிகழ்வில் இயக்குநர் பிருந்தாரதி, இயக்குநர் ராசி.அழகப்பன், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், நடிகர் கணேஷ் பிரபு, தமிழ்த் திரைபடப் பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன்,  பாடலாசிரியர்கள் அருண்பாரதி, வேல்முருகன்,. பேராசிரியர் ஆதிரா முல்லை, பேராசிரியர் நித்யா, எழுத்தாளர் லதா, ’புதிய தலைமுறை’ சுந்தரபுத்தன் ஆடிட்டர் சந்திரசேகரன் பக்கிரிசாமி, இந்திரஜித், கவிஞர் வீரசோழன் க.சோ.திருமாவளவன்,  கவிஞர் பச்சமுத்து, .கவிஞர் நம்ம ஊர் கோபிநாத், கவிஞர் ராஜ்குமார் கென்னடி, கவிஞர் தயாநிதி உட்பட பலரும் கலந்துகொண்டனர். நக்கீரன் குழுமம் சார்பில் சாருமதி, ராம், பிரசாத் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இலக்கியன் நன்றி நவின்றார்.

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !