சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்

hjk

கரோனா ஊரடங்குகாரணமாக தடைபட்டிருந்த சென்னை புத்தகக் காட்சி இன்று மாலை தொடங்குகிறது. அதன்படி, இன்று தொடங்கும் புத்தகக் காட்சி மார்ச் மாதம் 6- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் கரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

எனினும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவு டிக்கெட் கொடுக்கலாம். அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த கண்காட்காட்சியில் லட்சக்கணக்காண புத்தங்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. தினசரி காலை 11 மணிக்கு தொடங்கும் புத்தக்காட்சி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

bookfair
இதையும் படியுங்கள்
Subscribe