தொடங்கியது சென்னை புத்தகக் காட்சி! (படங்கள்)

44- வது சென்னை புத்தகக் காட்சியைத் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் தொடங்கியுள்ள புத்தகக் காட்சி மார்ச் 9- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புத்தகக் காட்சிக்காக சுமார் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 6 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை வாசகர்களுக்கு அனுமதி என்றும், முகக்கவசம் கட்டாயம் என்றும், கட்டாயம் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது பபாசி. மேலும் நுழைவு கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் காட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் ரூ.5 இலட்சம் நிதியுதவி தந்துள்ளார்.

book fair Chennai
இதையும் படியுங்கள்
Subscribe