பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை புத்தக கண்காட்சியில், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகனை உடனே விடுவித்து புத்தக கண்காட்சியில் அரங்கு அமைக்க மீண்டும் அனுமதி தர வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.