/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/book-fair-art.jpg)
47வது சென்னை புத்தகக் கண்காட்சிநந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது எனத்தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியைத்தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 4.30 மணிக்குத்தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் புத்தகக் கண்காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையில் நடைபெறும்.
வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் நாள்தோறும் மாலை நடைபெறும் சிந்தனை அரங்கில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்துறை ஆளுமைகள் உரையாற்ற உள்ளனர்.
Follow Us