சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து

nn

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் நாளை முதல் வரும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்தஅறிவிப்பில், சென்னை பரங்கிமலை வழித்தடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இரவு 10.20, 10.40, 11.05, 11.30 ஆகிய மணிகளுக்கு புறப்படும் சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட இருக்கிறது.

இரவு 10.10 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இடையிலான புறநகர் ரயிலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எழும்பூரில் இரவு 10:55க்கு புறப்படும் மன்னார்குடி விரைவு ரயில்நாளை முதல் மூன்று நாட்களுக்கு தாம்பரத்திலிருந்து செல்லும் என்றும், எழும்பூரில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்படும் மங்களூர் விரைவு ரயில் நவம்பர் மூன்றாம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து செல்லும் என்றும், எழும்பூரில் இருந்து 11. 35 மணிக்கு புறப்படும் திருச்சி ராக்போர்ட் விரைவு வரையில் நவம்பர் மூன்றாம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து செல்லும் என்றும், எழும்பூரில் இருந்து 11:55 மணிக்கு புறப்படும் சேலம் அதிவிரைவு வரையில் சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai thamparam
இதையும் படியுங்கள்
Subscribe