சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரி பிரவீன் குமாரை, சக ராணுவ வீரர் ஜக்ஷிர் சுட்டுக்கொன்று, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணுவ வீரர் ஜக்ஷிர் ஒழுங்காக பணிக்கு வராததை கண்டித்த பிரவீன் குமாரை, ராணுவ வீரர் ஜக்ஷிர் சுட்டுக்கொன்றார்.

Advertisment

chennai army house board two military man fire incident

துப்பாக்கி சத்தத்தை கேட்டு, அருகில் இருந்த ராணுவ வீரர்கள் பிரவீன் குமார் வீட்டிற்கு சென்று, இரண்டு ராணுவ அதிகாரியையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், ராணுவ உயர் அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.