சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கரோனா மருத்துவ பரிசோதனையை சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மருத்துவ குழுவினர் செய்கின்றனர்.
விடுதிகளில் தங்கியுள்ள இரண்டு மாணவர்களுக்கு கரோனா அறிகுறி இருந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடக்கிறது. இறுதியாண்டு படிக்கும் 700 மாணவர்களுக்கு மூன்று நாளில் கரோனா பரிசோதனையை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கூறுகின்றனர்.
ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டியில் மாணவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியான நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.