chennai anna arivalayam elangovan press meet at chennai

Advertisment

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.கஎம்.பி., டி.கே.எஸ்இளங்கோவனிடம், 'தி.மு.ககூட்டணியில் பா.ஜ.கஇடம்பெறலாம்' என பொன்னார் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த டி.கே.எஸ் இளங்கோவன்"அ.தி.மு.க. மீதான நம்பிக்கை குறைந்ததால் கூட்டணி பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் அப்படி கருத்து கூறியிருக்கலாம். அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் என்ன பிரச்சனையோ, பா.ஜ.க.வின் மக்கள் விரோதச் செயல்களை தி.மு.க. மிகக் கடுமையாக தொடர்ந்து எதிர்க்கும்.

தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது. தி.மு.ககூட்டணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார்" என்றார்.