திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், "திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு எம்.பி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருவதால், அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்".

chennai anna arivalayam dmk president mk stalin meet kn Nehru

Advertisment

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கே.என்.நேரு. அதைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.