Advertisment

பிரபல உணவகத்தின் சமையலறையில் பயங்கர தீ விபத்து!

Chennai Ambattur famous restaurant Kitchen incident

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு உணவுகள், இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள சமையலறையில் இன்று (12.11.2024) யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது உணவகத்தில் உள்ள பெரும்பாலான பகுதியில் பரவி உள்ளது.

Advertisment

இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து அம்பத்தூரில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற பகுதிகள் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களை காவல்துறை வெளியேற்றியுள்ளனர்.

Advertisment

மேலும், உணவகத்தில் இருந்தவர்களின் நிலைமை குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Chennai kitchen hotel Ambattur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe