chennai airport union home minister amitshah

இரண்டு நாள் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

Advertisment

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதியம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.அதைத் தொடர்ந்து, லீலா பேலஸ் ஹோட்டலில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு ஆலோசனை நடத்தினர்.

Advertisment

இந்த நிலையில், இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு லீலா பேலஸ் ஹோட்டலில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு காரில் சென்ற அமித்ஷா, பின்பு அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வழியனுப்பி வைத்தனர்.

Advertisment