சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லவிருந்த விமானத்தில் யோகா செய்த இளைஞர் இறக்கி விடப்பட்டார். விமானத்தில் ஏறிய இளைஞர் குணசேனா பிறருக்கு தொல்லை கொடுக்கும் விதமாக, யோகா, உடற்பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த இளைஞர் இறக்கி விடப்பட்டு, அவரின் டிக்கெட் கட்டணத்தை திருப்பி தந்தது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம். மேலும் விமானத்தில் முன்னுக்கு பின் முரணாக நடந்த இளைஞர் குணாசேனாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.