சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறை எண் 1-இல் வழக்குகளை இன்று (11/11/2019) விசாரிக்கத் தொடங்கினார். அப்போது, மூத்த வழக்குரைஞர்களால் நீதிமன்ற அறை நிரம்பியது. வழக்குரைஞர்கள் சூ மோட்டோ கன்டெம்ப்ட், பில் வழக்குகள் குறித்து முறையீடு செய்தனர்.

Advertisment

CHENNAI AIR POLLUTION HIGH COURT JUDGE ORDER

புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன்பு, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர், சென்னையில் காற்று மாசு பிரச்சனை இருக்கிறது. அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். அதற்கு தலைமை நீதிபதி “இது எனக்கும் தெரியும். பாட்னாவில் இருந்தபோதே இந்தப் பிரச்சனையின் தீவிரம் தெரியும். உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த வாரம் மனுவைத் தாக்கல் செய்யுங்கள்.” என்று அறிவுறுத்தினார்.