அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் அவரது கட்சியினர் திரளாக பங்கேற்றனர். சரத்குமாரும், அவரது கட்சியினரும் கருப்பு நிற உடை அணிந்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சரத்குமாரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரதத்தை வரவேற்று சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சென்னை - நடிகர் சரத்குமார் உண்ணாவிரதம்
Advertisment