Advertisment

காருக்குள் சிக்கிய சிறுமி மூச்சுத் திணறி பரிதாப பலி

சென்னை ஃபைனான்ஸ் கம்பெனியின் எக்ஸ்க்கியூட்டிவ்அதிகாரியாக இருப்பவர் ஜோசப் ரோகித். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி ஆடிட்டரான தாமஸ் பெர்ணாண்டோவின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு 2 வயதில் விபானா சம்தா என்ற பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையுமிருக்கிறது. கடந்த 5 தினங்கள் விடுமுறை என்பதால் ஜோசப் ரோகித் குடும்பத்தோடு தூத்துக்குடி புதுக்கிராமத்திலுள்ள தன் மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

Advertisment

c

நேற்று குழந்தை விபானா சம்தா விளையாடிய போது அவளைக் காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். தேடியும் கிடைக்காததால், பக்கத்தில் நின்றிருந்த தன் மாமனாரின் காரைப் பார்த்த போது உள்ளே குழந்தை மயங்கி நிலையிலிருந்தது தெரியவர, பதறிய பெற்றோர்கள், உடனே அவளை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாகத் டாக்டர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக அனுப்பிய தென் பாகம் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், அவரது மாமனாரின் மாருதி ஸ்விப்ட் கார் கதவு திறந்து கிடந்ததால் உள்ளே விளையாடிய அந்தக் குழந்தை வெளியே வர முடியாமல் திணறியிருக்கிறது. உள்ளிருந்தபடி திறக்க முடியாத அந்தக் காரில் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று விசாரணை நடக்கிறது என்கிறார்.

வந்த இடத்தில் நடந்த இந்த சோகம் அங்கே அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

car
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe