படங்கள்: அசோக்குமார், குமரேஷ்
சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு 19.06.2020 அதிகாலை முதல் 30.06.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது எனக் கடந்த 15ஆம் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும், திருவள்ளுர் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளுர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சகளிலும், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசிகுடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி அரசு வழங்கும் நிவாரணமாக ரூபாய் 1000 இன்று முதல் நான்கு மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. சென்னை புதுப்பேட்டையில் மக்கள் வரிசையில் நின்று நிவாரணத் தொகையை வாங்கிச் சென்றனர். மயிலாப்பூர் கபாலிதோட்டம் பகுதியில் நிவாரண தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல் சென்னையில் ஒவ்வொரு தெருவுக்கும் சென்ற அரசு ஊழியர்கள், ஒரு இடத்தில் அமர்ந்து அந்த தெருவில் ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணத் தொகையை வழங்கி வருகின்றனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/rupees_500_note_22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/rupees_500_note_21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/rupees_500_note.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/s24_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/s25_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/s26_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/s27_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/s28_0.jpg)