/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/toll gate_0.jpg)
கடந்த நான்கு நாட்கள் விடுமுறையை அடுத்து பணிக்காக சென்னை திரும்பிய பயணிகளால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
பூஜை விடுமுறைகளை சேர்த்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தொடர்ந்து வந்ததால் சென்னையில் பணிபுரியும் வெளியூர்வாசிகள் பலர், தங்களின் சொந்த ஊர்களுக்கு இந்த விடுமுறையின் பொருட்டு சென்றனர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் பின் பணிக்காக இன்று சென்னை திரும்பியுள்ளனர். இவ்வாறு பலர் சென்னை திரும்பியதால் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்த விடுமுறைக்காக அரசாங்கத்தால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதுமட்டும் அல்லாமல் பலர் தங்களின் சொந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளதால் சுங்கச்சாவடி கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)