/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-33.jpg)
சென்னை புழல் 1 சிறைக்காவலாராகபணிபுரிந்து வந்தவர் இன்பரசு. இவர் சனிக்கிழமை தனது பணியை முடித்துவிட்டு மறுநாள் விடுமுறை என்பதால் தனது சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த பழைய சீவரத்திற்குச் சென்றுள்ளார்.
இன்று காலை, தனது பணிக்குச் செல்ல வழக்கம்போல் தயராகியுள்ளார். இந்த நிலையில் அவருடைய நண்பர்கள் திடிரென அழைக்க, உடனடியாகச்சென்ற இன்பரசு, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து, அதில் முக்கியமாக இன்பரசு செல்ஃபோனில் உள்ள நம்பர்களை எடுத்து அவர்களிடமும் விசாரணை செய்துவருகின்றனர். இந்த விசாரணைக்குப் பிறகே இந்தக் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)