Advertisment

திருமணத்திற்கு மறுத்த காதலன்; கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய காதலி 

chengalpattu police control room  woman incident fake call

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளம்பெண்ஒருவர், தன்னை நான்கு இளைஞர்கள்காரில் கடத்திச் சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து விசாரணையைத்தொடங்கிய காவல்துறையினர், அப்பெண்ணிடம் விசாரிக்கையில், அப்பெண் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் ரேவதி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பது தெரிய வந்தது. ரேவதி சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் பணி புரிவதாகப் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தன்னுடையதோழியை சந்திப்பதற்காகசைதாப்பேட்டையிலிருந்து செங்கல்பட்டுரயில் நிலையத்திற்கு வந்திருந்தபோது தன்னை காரில் கடத்திச் சென்ற 4 பேர் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத்தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் இதில்சம்பந்தப்பட்ட நான்கு பேரையும்தொடர்பு கொண்ட போலீசார், அவர்கள் 4 பேரும்வெவ்வேறுபகுதிகளில் இருப்பது தெரிய வந்தது. மேலும் ரேவதி, போலீசார் விசாரணையில் முன்னுக்குப் பின்முரணாகப் பதிலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரேவதி மீது சந்தேகமடைந்த போலீசார், மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில்காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மலையன்குளம் பகுதியைச் சேர்ந்தசலீம் என்பவரை ரேவதி கடந்த 3 மாத காலமாக காதலித்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அழைத்ததன் பேரில் ரேவதி செங்கல்பட்டுரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் சலீமுடன் பைக்கில்சென்று, வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். பின்னர் ரேவதி, சலீமை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்குசலீம் மறுத்துள்ளார். எனவே சலீமை போலீசில் சிக்க வைக்க தன்னை 4 பேர் கடத்திச் சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் போலீசாரிடம்கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chengalpattu police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe