/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmk_36.jpg)
செங்கல்பட்டு பாமகநகரச் செயலாளராக இருந்தவர் நாகராஜ். பூ வியாபாரம் செய்து வரும் இவரை நேற்று இரவு 9.45 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அங்கிருந்து அவரை மீட்ட பொதுமக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நாகராஜ் இறந்து விட்டதாகத்தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் போராட்டம் நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.
இந்நிலையில் நாகராஜனைக் கொலை செய்துவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் பணியைமேற்கொண்டனர். அப்போது தப்பியோட முயன்ற அஜய் என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களைத்தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்துதொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)