Advertisment

செங்கல்பட்டு கொலை சம்பவம்... இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது ஏன்? 

Chengalpattu incident .. Why were the two encountered?

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையில் தொடர்புடைய இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலையம் அருகே நேற்று அப்பு கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுத்தெருவில் வசித்து வரும் மகேஷ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திரமேரூர் திருப்புலிவனம் பகுதியில் பதுங்கி இருந்த மாதவன், மொய்தீன், தினேஷ், ஜெசிகா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில் அதில் தினேஷ், மொய்தீன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதாக பின்னர்தகவல் வெளியாகியது.

Chengalpattu incident .. Why were the two encountered?

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் தினேஷ் மற்றும் மொய்தீன் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மொய்தீன் மீது 3 கொலை வழக்குகளும், தினேஷ் மீது ஒரு கொலை வழக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த கொலை தொடர்பாக அவர்களைப் பிடிக்க சுற்றிவளைத்த பொழுது இருவரும் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் போலீசார் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக செங்கல்பட்டு எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். தற்காப்பிற்காக போலீசார் சுட்டதில் தினேஷ் மற்றும் மொய்தீன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chengalpattu police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe