Advertisment

திருப்போரூர் ஆளவந்தான் அறக்கட்டளை சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

chengalpattu district thiruporur temple land chennai high court

திருப்போரூர் ஆளவந்தான் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை அளவீடு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் அறக்கட்டளைக்கு சொந்தமான சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 2,000 ஏக்கர் சொத்துகளை அபகரிக்கும் முயற்சியைத் தடுத்து, கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை, வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய, வருவாய்த்துறை செயலருக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை, யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் எம்.கார்த்திகேயன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை அளவீடு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இரண்டு வாரங்களில் அளவீடு செய்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

lands temple thiruporur chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe