Advertisment

இளம்பெண் தற்கொலை வழக்கு... தேடப்பட்டு வந்த தி.மு.க. முன்னாள் நிர்வாகி கைது...

Chengalpattu District Seiyur

செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தி.மு.க. முன்னாள் நிர்வாகி தேவேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி அன்று தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கில் புருஷோத்தமன் தாமாகவே முன்வந்து போலீசாரிடம் சரண் அடைந்தார். தேவேந்திரன் தலைமறைவான நிலையில் ஜூலை 13ஆம் தேதி சென்னையில் அவரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chengalpattu incident Police investigation
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe