/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/peopl3333.jpg)
செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலையம் அருகே அப்பு கார்த்திக் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுத்தெருவில் வசித்து வரும் மகேஷ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டஇருவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறுகின்றனர் காவல்துறையினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, கொலை செய்யப்பட்ட இருவரின் உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)