/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art hand cop_13.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (வயது 67) என்பவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 9 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தி உள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில்போலீசார் ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் ஜெயபால் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியது உறுதியான நிலையில் நீதிபதி தமிழரசி, ஜெயபாலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாகஒரு மாதத்திற்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.
Follow Us