செங்கல்பட்டில் தொழிலதிபர் குண்டுவீசி வெட்டிக்கொலை-கொலையாளியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு போலீஸ்!

Chengalpattu businessman bombed incident

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்த திருமாறன். தொழிலதிபரான இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு ஆட்கள் சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தொழிலதிபரான இவருக்கு தொழில் போட்டியில் பல முன் விரோதங்கள் உள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் தொழில் போட்டியால் திருப்போரூர் அருகே இவரை கொலை செய்ய சிலர் முயன்ற போது அதில் இருந்து தப்பினார்.

இதனால் இவர் நீதிமன்றம் மூலம் பாதுகாப்பு கோரியிருந்த நிலையில் பாதுகாப்புக்காகஎழிலரசன் என்ற காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்திருமாறன் திருமண நாளை முன்னிட்டு அருகே உள்ள செல்வ முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் நேற்று வந்து இருந்தார். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும்போது, அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டைவீசினர். இதில் நிலை தடுமாறியதிருமாறனை நோக்கி வந்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த திருமாறன் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுக்காப்பு போலீஸ் எழிலரசன் 8-பேர் கொண்ட கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில் திருமாறன் உடலைக் காண ஏராளமான பொதுமக்கள் கூடியதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இரு உடல்களையும் கைபற்றியபோலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

bomb Chengalpattu incident police
இதையும் படியுங்கள்
Subscribe