Chengalpattu ADMK member passes away case  6 people surrender in trichy court

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதி, கண்ணதாசன் நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான திருமாறன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசி அவரைத் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே திருமாறன் பலியானார்.

Advertisment

அவருடைய பாதுகாப்புக்காக இருந்த காவலர், அந்தக் கும்பலை நோக்கி சுட்டதில் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே குண்டடிப்பட்டு உயிரிழந்தார். தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம்தான் இதற்கு காரணம் என்பதால், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராஜேஷ் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Advertisment

இந்தநிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளிகளான சரண், ரமேஷ் குணசேகரன், முருகன் மகேஷ், அஜித் ஆகிய மற்ற 6 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.