Advertisment

அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த வேன் விபத்து... இருவர் உயிரிழப்பு!

admk

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

Advertisment

இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது பொதுக்குழு. கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்த வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மேல்மருவத்தூர் அருகே திண்டிவனத்தை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்புறமாக அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஆட்களுடன் வந்து கொண்டிருந்த வேன் மீது மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

admk Chengalpattu lorry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe