
சென்னையை அடுத்த பொன்னேரி ஏலியம்பேடு ஏரியில் மர்ம நபர்கள் குப்பைகளைக் கொட்டி தீ வைத்ததால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்களின் நீராதாரம் மற்றும் விவசாயத்திற்குப் பயன்பட்டுவந்த இந்த ஏரியின் ஒருபகுதியில், மர்ம நபர்கள் ரசாயன கழிவுகளைக் கொட்டி தீயிட்டுள்ளனர். இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. அந்த வழியாக வேலை செய்ய வந்தவர்கள் ரசாயனகழிவை எரித்ததால் ஏற்பட்ட மாசு கலந்த காற்றை சுவாசித்ததில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இப்படி ரசாயன கழிவுகளை அலட்சியமாக கொட்டி தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
தகவலறிந்த பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம், சம்பவ இடத்தில் ஆய்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us