Advertisment

மாணவர்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் கெமிக்கல்!

Chemical drinking water tank of the students in Panchayat Union Middle School

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்துள்ளதாகத்தலைமை ஆசிரியர் அளித்த புகார் பெரும் பரபரப்பைக்கிளப்பியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர்த்தொட்டியில் கெமிக்கல் கலந்துள்ளதாக அப்பள்ளி தலைமை ஆசிரியைபுகார் கொடுத்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அப்பள்ளிக்குச் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இதே பகுதியில்கடந்த 6 ஆம் தேதிநடைபெற்ற திருவிழாவில் பட்டியலின இளைஞர் ஒருவரைக் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யத்தடுத்தது பெரும் பிரச்சனையாக மாறியது. அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கோவிலைப்பூட்டி சீல் வைத்தார். பின்னர் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கோவிலைத்திறந்து வைத்தார். இந்த பிரச்சனை முடிந்து தற்போது நிலைமை சீரான நிலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் (பினாயில் அல்லது சோப் ஆயில்) கலந்துள்ளதாக எழுந்துள்ள சம்பவம் மீண்டும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

students karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe