Advertisment

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறைப்பு!

chembarampakkam lake water opening details over a nivar cyclone

Advertisment

'வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,016 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 4,371 கனஅடியாகக் குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 21.85 அடியாக உள்ளது.

காலை 06.00 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 13.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், குன்றத்தூரில் தலா 13.5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர்- 10.6 செ.மீ., சோழவரம்- 16 செ.மீ., ரெட்டேரி- 13.1 செ.மீ., பூண்டி- 12 செ.மீ.,மழை பதிவானது .

Lake chembarambakkam nivar cyclone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe