/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lake432222.jpg)
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து இன்று (05/01/2021) மதியம் உபரிநீர் திறக்கப்படுகின்றன.
'திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று (05/01/2021) மதியம் 01.00 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி 23 அடியை எட்டியதால், முதற்கட்டமாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அதேபோல் புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்படுகிறது' என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புழல் ஏரி திறக்கப்படுவதால் நாரவாரிகுப்பம், வடகரை, புழல், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)