Skip to main content

ஈரோட்டிலும் அமைச்சருக்கு நெருக்கமானவரின் இடங்களில் சோதனை

 

Checked places close to the minister in Erode too

 

ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும் டிரான்ஸ்போர்ட் அதிபருமான சச்சினாந்தம் என்பவரின் வீடு மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

தமிழக மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஈரோட்டில் உள்ள செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பரும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு KSM டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனம் மூலம் வாகனங்களை இயக்கி வருபவருமான சச்சினாந்தம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

ஈரோடு சக்தி நகர் 3வது வீதியிலுள்ள அவரது வீடு மற்றும் செங்கோடம்பள்ளம் GB காம்பளக்ஸில் இயங்கி வரும் KSM டிரான்ஸ்போர்ட் நிறுவன அலுவலகங்களில் கேளரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 13 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீடு மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !