Advertisment

பயிர்காப்பீட்டு தொகையாக ரூ.5-க்கு காசோலை! - விவசாயிகள் அதிர்ச்சி!

5 rs chck

திண்டுக்கல் அருகே பயிர் காப்பீடு இழப்பீடாக ரூ.5, 10-க்கு காசோலை வழங்கப்பட்டதை கண்டு விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

மழை பொழிவு குறைவு, பயிர் கருகுதல் உள்ளிட்ட நேரங்களில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு கொண்டு வந்த பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூ.610 முதல் ரூ.200 வரை பயிர் காப்பீடு செய்திருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை இல்லாததால் பயிர்கள் கருகியது. இதையடுத்து, விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதேபோல், இழப்பீடாக விவசாயிகளுக்கு காசோலையும் வழங்கப்பட்டது. ஆனால் பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்ட காசோலையை கண்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதில் பெரும்பாலான விவசாயிகளுக்கு ரூ.3, ரூ.5, 10 என குறைந்த தொகையே காசோலையாக வழங்கப்பட்டது.

18 rs chck

இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி நேற்று எழுப்பினார். அப்போது விவசாயிகளுக்கு இழப்பீடாக கொடுக்கப்பட்ட ரூ.3, ரூ.5, 10 -க்கான காசோலையாக அவர் ஆதாரத்துடன் கொண்டுவந்து பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள காசோலையின் தொகையை பெற வேண்டும் என்றால் விவசாயி வங்கி கணக்கை திறக்க வேண்டும். வங்கி கணக்கு திறப்பதற்கு குறைந்தப்பட்சம் ரூபாய் 500 செலவாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடாக ரூபாய் 10 வழங்கப்படுகிறது என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்கள் சில இடங்களில் இந்த பிரச்னை இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, திண்டுக்கல் நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர் என்றார்.

Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe