ADVERTISEMENT

காதல் கணவன் வீட்டு வாசலில் காதல் மனைவி தர்ணா ; நடுநாயகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெண் ஆய்வாளர்

07:58 AM Dec 19, 2019 | kalaimohan

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கதிராமங்கலத்தில் உள்ள காதல் கணவன் வீட்டுவாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை உண்டாக்கியது.

ஆய்வாளரின் அறிவுறைக்கு பிறகு மூன்று மணிநேர தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறார் அந்த இளம்பெண்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் கனிமொழியிடமே விசாரித்தோம் " எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தூவிபுரம், எனது பெயர் கனிமொழி பி.காம். பட்டதாரி, நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எனது சித்தி வீட்டில் தங்கி அங்குள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அங்கு வேலை பார்க்கும் சமயத்தில் மதன் என்கிற இளைஞர் ஒருவன் முகநூல் மூலம் நண்பராகி. செல்போனிலும் பேசிக் கொண்டிருந்தோம். இந்த சூழலில் என்னுடைய செல்போன் நம்பரை தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் மாணிக்க நாச்சியார் கோவில் தெருவைச் சேர்ந்த பி.காம். பட்டதாரியான வெங்கடேஷ், அவரது நன்பனான மதனிடம் வாங்கி என்னிடம் பேசிவந்தார். பிறகு காதலாக மாறி, இரண்டரை ஆண்டுகள் காதலித்தோம்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அரசுத்தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்தார் வெங்கடேஷ் .கூடவே என்னையும் தூக்குக்குடியில் அவர் பயிற்சி பெறும் தேர்வு மையத்திலேயே ரயில்வே துறை தேர்வுக்கு சேரவைத்தார் வெங்கடேஷ்.

அங்கு சென்றதும் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது, கடந்த 8 மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் எனக்கு தாலியும் கட்டினார், அதன்பிறகு கணவன் மனைவியாகவே இருவரும் வாழ்ந்து வந்தோம், அதன் மூலம் கர்ப்பமும் அடைந்தேன், இது வெளியில் தெரிந்தால் வேறுமாதிரி ஆகிடும், அப்பா,அம்மாவிடம் சொல்லி சமாதானம் வாங்ணும்வரை இந்த குழந்தை நமக்கு வேண்டாம் என கூறி வற்புறுத்தி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிகொடுத்து கர்ப்பத்தை கலைத்தார்.

பெற்றோரிடம் இதுகுறித்து பேசி சம்மதிக்க வைத்து அழைத்து செல்வதாக வந்தவர், கொடுத்த வாக்குறுதியை மீறி வேறு திருமணம் செய்துகொள்ள பெண் பார்ப்பதை கேள்விப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கதிராமங்கலம் வந்து வெங்கடேஷின் பெற்றோரிடம் முறையிட்டேன், கோபமான வெங்டேஷின் உறவினர்கள் அடித்து விரட்டினாங்க, வேறு வழியில்லாம, திரும்ப சென்று ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி புகார் அளித்தேன். அதற்கான காவல் நிலையத்தில் மனு ரசீதையும் பெற்றுக்கொண்டு இங்கு வந்து நீதிகேட்கிறேன்," என்கிறார் கனிமொழி.

வெங்கேடஷின் வீட்டிற்கு வந்த கனிமொழி, அவரது வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பொதுமக்கள் கூடிவிட்டனர். இந்த தகவல் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் காவல் ஆய்வாளரான சுகுணாவிற்கு தெரியவர அவசர அவசரமாக விரைந்து சென்று விவரங்களைக்கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்,

அப்போது," தனது கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை தர்ணாவில் ஈடுபடுவேன், இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்" என ஆய்வாளர் சுகுனாவிடம்கூற, கனிமொழியை தனியாக அழைத்துச்சென்று, அறிவுறைகளை வழங்கி, இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தினார்.

அதோடு வரும் 3 ஆம் தேதி இரு தரப்பினரையும் அழைத்துப்பேசி முடிவெடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்," என்று ஆய்வாளர் சுகுனா கூறி தர்ணா போராட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT