குமாி மாவட்டம் காஞ்சாம்புறத்தை சோ்ந்த பி.பாா்ம் பட்டதாாியான அசோக் மற்றும் அதே பகுதியை சோ்ந்த தனியாா் மருத்துவமனையில் வேலை பாா்க்கும் நா்ஸ் இருவரும் காதலித்து வந்தனா். மேலும் இருவரும் அடிக்கடி பல்வேறு ஊா்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளனா்.

Advertisment

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளயிருந்த நிலையில் காதலியின் பெற்றோா்கள் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்து திருமணம்முடிவு செய்துள்ளனா். இதற்கு அந்த பெண்ணும்சம்மதித்துள்ளாா். இதை கேள்விப்பட்ட காதலன் அசோக் அதிா்ச்சி அடைந்த நிலையில் காதலியிடம்மனசை மாற்றிக்கொள்ளாதே என கெஞ்சியும் அவர்சம்மதிக்கவில்லை.

Advertisment

love

இதனால் மனவருத்தமடைந்த காதலன் டாஸ்மாக்கில் குடித்துவிட்டுநண்பனுடன் சோ்ந்து காதலியை பழிவாங்க திட்டமிட்டான். அந்த திட்டம்படி காதலியை சந்தித்த அசோக் இனி நானும் நீயும் சேரமுடியாது. நான் உன்னை உயிருக்குயிராய் காதலித்தும் எந்த பலனும் இல்லை. நானும் இனி எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை.உன்திருமணத்துக்கு முன் நான் இந்த ஊரை விட்டு வேறு எங்கேயாவது போக போறேன். அதனால் கடைசியாக உன்னிடம் கொஞ்சம் நேரம் தனிமையில் இருக்க ஆசைப்படுகிறேன் என்னுடன் வா என்றிருக்கிறான்.

love

அவன் பேச்சில் மனம் இறங்கிய காதலி அதற்கு சம்மதித்ததால் அவரைகன்னியாகுமாியில் ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றியிருக்கிறான். காதலன் திட்டம்படி லாட்ஜ் அறைக்குள் இருவரும் சென்ற சில நிமிடங்களில் வெளியில் நின்று கொண்டியிருந்த காதலன் நண்பன் போலிசுக்கு போன் செய்து போலிசை லாட்ஜ்க்கு வரவழைத்தான். போலிஸ் வந்ததும் 500 ருபாய் கொடுத்து அவரிடம் உல்லாசமாக இருக்க வந்தேன் என்று ஓரு செகன்டில் அவரை விபச்சாாியாக மாற்றினான். அதோடு அவரை திருமணம் செய்ய இருந்த மாப்பிளைக்கும் தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டான்.

Advertisment

அதன்பிறகு உண்மை தொியவரவே போலிஸ் காதலன் அசோக்கை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அந்த பெண் பெற்றோருடன் சென்றாா்.