Advertisment

சிபிஐ ஆபிஸர் எனச்சொல்லி 6 லட்சம் சீட்டிங்; சிக்கிய ஆந்திர குடும்பம்

nn

Advertisment

கள்ளக்குறிச்சியில் சிபிஐ அதிகாரி என பேசி பெண் மருத்துவரிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்த அரசு பெண் டாக்டரை கடந்த ஜூலை 29ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், டில்லியில் இருந்து சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாகவும், உங்கள் முகவரியில் இருந்து மலேசியாவிற்கு மெத்தபெட்டமின் போதைப்பொருள், போலி பாஸ்போர்ட்டுகள், ஏ.டி.எம் கார்டுகள் அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. விசாரணைக்கு நீங்கள் டெல்லிக்கு வர வேண்டும். இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தான் கூறும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கூறினார்.

அச்சமடைந்த பெண் டாக்டர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு 6 தவணைகளாக ரூ.38.69 லட்சம் அனுப்பினார். அதன்பிறகும் பணம் கேட்டு மிரட்டியதால், கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் அப்புதுரை தலைமையிலான போலீசார், மர்ம ஆசாமியின் மொபைல் எண், பணம் அனுப்பிய வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், இந்த மோசடி ஆந்திரா மாநிலம், கோனசீமா மாவட்டம், அம்பாஜிபேட் இருசுமுன்டா மண்டல், இந்திரா காலனியைச் சேர்ந்த பிரசாத்ராவ், அவரது தந்தை சத்திய நாராயணா, தாய் ரமாதேவி, மனைவி அருணாகுமாரி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து பெண் டாக்டரிடம், சி.பி.ஐ அதிகாரி எனக் கூறி பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் ஆந்திரா சென்று, பிரசாத்ராவ் (33) என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது தந்தை, தாய், மனைவி ஆகிய மூவரை தேடிவருகின்றனர்.

kallakurichi police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe