Chathankulam incident ... Police officers to appear

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன்ஆகியோர் நாளை காலை ஆஜராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மின்னஞ்சல் வழியாகநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில்,சாத்தான்குளம் காவல் நிலையம் முழுக்க முழுக்க ஏடிஎஸ்பி கட்டுப்பாட்டிலேயே உள்ளது.விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காததுடன் ஆவணங்களையும் வழங்கவில்லை. காவலர் மகாராஜன் நீதித்துறை நடுவரிடம் மரியாதை குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார்என கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டு காவல்துறை அதிகாரிகள், காவலர்மீது தாமதமாக வந்ததற்காக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணைக்கு இடையூறாகஇருப்பதால்மூவரையும் அரசுபணியிடை மாற்றம் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.