தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி 'முனைவர்' பட்டம் பெற்றார்.

Advertisment

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 22.10.2019 இன்று நடைபெற்ற பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடிகர் சார்லிக்கு 'முனைவர்' பட்டம் வழங்கினார்.

Charlie is a doctoral student

59 வயதான நடிகர் சார்லியின் இயற் பெயர் மனோகர். பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக திரைப்படத்திற்காக தனது பெயரை 'சார்லி' என மாற்றிக் கொண்டார்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி பிறந்த நடிகர் சார்லி, தமிழ் இலக்கியத்கில் எம். ஏ. பட்டதாரி ஆவார். 'இயக்குநர் சிகரம்' கே. பாலச்சந்தர் இயக்கிய 'பொய்க்கால் குதிரை' திரைப்படம் மூலம் 1983-ம் ஆண்டு நகைச்சுவை நடிகராக அறிமுகமான சார்லி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இதுவரை 800க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.