Advertisment

’அறநிலையத்துறை அலுவலகங்கள் கோயிலுக்கு வெளியே இருக்கவேண்டும்’ -  எச்,ராஜாவின் புது குண்டு

rain

நீர் நிலைகளை புனிதமாக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவருமே இந்து விரோத தீயசக்திகள் என வழக்கமான கலேபரமான பேச்சால் குற்றஞ்சாட்டினார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

Advertisment

தாமிரபரணி புஷ்கர விழாவினை முன்னிட்டு விசுவஹிந்து பரிஷத் சார்பில் காவேரி ரத யாத்திரை கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் தொடங்கியது. ஊர்வலத்தை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தொடங்வைத்தார்.

Advertisment

அப்போது பேசிய எச்,ராஜா, "தாமிரபரணியில் இந்துக்கள் நடத்தும் புஷ்கர விழாவுக்கு சாமிகளே இல்லை என்று கூறுபவர்கள் ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள் ஆட்சேபனை தெரிவிக்க இவர்கள் யார். இஸ்லாமிய விழாவுக்கும், கிறிஸ்தவர்கள் விழாவுக்கும் ஆட்சேபனை தெரிவிப்பார்களா. இதில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், திமுக எல்லாம் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். திமுகவை போல் ஒரு இந்து விரோத சக்தி வேறு எதுவும் இல்லை.

12 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணியில் புஷ்கரம் நடத்தும்போது திமுகவைச் சேர்ந்த ஆவுடையப்பன் கலந்து கொண்ட ஆதாரம் உள்ளது. வட இந்தியாவில் கும்பமேளா நடத்துவது போல், தமிரபரணி மகா புஷ்கர விழாவினை நடத்த வேண்டும் என கடந்த ஓராண்டாக ஆன்மீக பெரியவர்களும், இந்து அமைப்புகளும் கூறி வருகிறோம். இதற்கு சிறப்பு ரயில் விடவேண்டும் என நாங்கள் ரயில்வே பொது மேலாளரை அனுகி கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்த சூழலில் விழாவுக்கு போதிய வசதிகளை மாநிலஅரசு செய்யது கொடுக்கவேண்டாமா, அறநிலையத்துறை செய்யதுகொடுக்கவேண்டாமா, ஆனால் இந்து சமய அறநிலையத்துறைக்கூட எதையும் செய்யவில்லை.முதலில் அறநிலையத்துறை அலுவலகங்கள் அனைத்தும் கோயிலுக்கு வெளியே இருக்கவேண்டும். ஆகமவிதிகளுக்கு இவைஎதிரானது.

ஆகம விதிகளை பற்றி பேசும் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி இதற்கு முன் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் 72 கோயில்களின் உற்சவ மூர்த்திகளை கொண்டு வந்து கண்காட்சி வைத்தது மட்டும் எப்படி ஆகம விதியாகமுடியும். இதற்கு முதலில் அவர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு இந்து அடுத்த மதத்தின் மீது வழக்கு போட்டிருக்கோமா, ஆனால் சபரிமலையில் வழிபட வேண்டும் என இஸ்லாமிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று கேரளாவில் உள்ள அனைத்து தாய்மார்களும் சபரிமலையில் பாரம்பரிய முறையிலான வழிபாடுதான் வேண்டும் என போராட்டம் செய்கிறார்கள்.

கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவில் ஆண்களே வழிபட முடியாத கோயில்கள் ஆறு உள்ளது. பெண்கள் வழிபட முடியாத கோயில்களும் நிறையஉள்ளது. இதெல்லாம் அந்தந்த கோயில் வழிபாட்டு உரிமைகள். இதையெல்லாம் மீற முடியுமா.

இந்துக்கள் தான் நாட்டின் புனிதத்தை காத்து வருகின்றனர். நீர் நிலைகளை புனிதமாக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் அனைவரும் இந்து விரோத தீய சக்திகள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," தமிழக முதல்வர் பழனிசாமி மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக மக்களின் திட்டங்களுக்காக தான் பிரதமரை சந்திக்க சென்றுள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. என்றார்

மேலும், அவரிடம் பாஜக ஆளும் போது, இந்தியாவின் கலாச்சாரங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து சில தீர்ப்புகள் வருகிறதே என்ற கேள்விக்கு, "ஆட்சி வேறு, நீதிமன்றம் வேறு அதனை கட்சி வழிநடத்த முடியாது. சில தீர்ப்புகள் தொடர்பாக மக்கள் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அது மக்களுக்கே தெரியும் ". என்றார்.

H Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe