Chariot pilgrimage to Trichy Amma Mandapam Staircase!

Advertisment

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அணை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில்சிறப்பு ரத யாத்திரை நடத்தப்படுவது வழக்கம். புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக் காவிரியில் தொடங்கி, காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதி நீரின்புனிதத்தைப்பாதுகாக்க வலியுறுத்தியும் நதி நீர் மாசுபடாமல் பாதுகாக்க வலியுறுத்தியும் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி 11 ஆம் ஆண்டு இதய ரத யாத்திரை குடகு மலையில் அகில பாரதசன்னியாசிகள்சங்க நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் சுவாமிராமானந்தாதலைமையில் கடந்த 23ஆம் தேதி துவங்கியது. நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்த காவிரி ரத யாத்திரைக்கு விசுவ இந்துபரிஷத்மாநிலஅமைப்புச்செயலாளர் சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள்வானவேடிக்கைமுழங்கப்பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர்.

இதையடுத்து ரத யாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே கும்பாபிஷேகஆராதனையுடன்கூட்டு வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்துகாவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது.