அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு அதிமுகவின் முன்னாள்அமைச்சர்களுக்குச்சொந்தமான இடங்களிலும், வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்அதிரடியாகச்சோதனை நடத்திவழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்து கிட்டத்தட்ட 19 மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று பலரும் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுவிஜயபாஸ்கருக்குசொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்நடத்திய சோதனையில் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில்வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தற்போதுகுற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று முன்னாள்உயர்கல்வி துறைஅமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் மீதுகுற்றபத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்குச்சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் தான் ஆட்சியிலிருந்த போதுவருமானத்திற்குஅதிகமாக ரூ. 40 கோடி சொத்து சேர்த்ததாகவழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் மீது தர்மபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் 10000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.