Advertisment

விருதுநகர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!- ஒரு பள்ளி மாணவன் விடுவிப்பு!

 Chargesheet filed in Virudhunagar case! - A school student released!

விருதுநகர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்று (23-ஆம் தேதி) 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி மாணவன் ஒருவன் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளான்.

Advertisment

இவ்வழக்கில் ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய 4 பேரும், மாணவர்கள் 4 பேரும், கடந்த மார்ச் 21- ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த வழக்கில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தபடி, இன்று (23-ஆம் தேதி) 806 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்தில் ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய 4 பேர் மீதும், விருதுநகர் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றத்தில் அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தால், ஒரு மாணவரை மட்டும் விடுவித்து, இவ்வழக்கின் விசாரணை அதிகாரி சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்.

CBCID Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe